சென்னை, பிப்ரவரி 17, 2018: கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரின் பங்கு குறைந்துவிட்டது. இது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமும் கர்நாடக மாநிலமும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் தங்களுடைய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் முக்கிய பரிந்துரையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அதில் நீர் தொழில்நுட்ப வல்லுநர்களும் விவசாய நிபுணர்களும் இருக்க வேண்டும்.
காவிரி நீர் பாசனத்தை நம்பியுள்ள பகுதிகள் அனைத்தும் சந்தையில் தேவைப்படும் பயிர்களுக்கு குறைந்த அளவிலான தண்ணீரைப் பயன்படுத்த சொட்டு நீர் பாசனம் மற்றும் பிற நீர் சேமிப்பு நுட்பங்களையும், யுக்திகளையும் பயிர்செய்வதில் கையாளப்பட வேண்டும். இதனால் விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தலாம்.
உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கான அதன் நீர்த்தேக்கக் குழாயிலிருந்து பயன் பெறும் வாய்ப்பு உள்ளது என்பதை தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. பெருகி வரும் மழைநீரை சேமித்து அதைப் பயன்படுத்துவது கட்டாயமாக்குவது ஒரு வழி. தமிழ்நாடு அதிக மழை பொழிவை வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் பெறும் என்பதால், நீர்ப்பாசனம் மற்றும் நீரின் அளவு அதிகரிக்கும் அந்நீரைச் சேமிப்பதன் மூலம் நம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
தண்ணீர் தேவை, தண்ணீர் விநியோகம் ஆகிய இரண்டுக்குமான வாய்ப்புகளை காவிரி மேலாண்மை வாரியம் அவசரமாகப் பரிசீலிக்கலாம். இதனால் தமிழ்நாட்டின் பல சிறு குறு விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் வருமானத்தையும் பாதிக்காத அளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிக பட்ச நன்மைகளை உறுதி செய்ய ‘நீர் பாதுகாப்பு வாரியம்’ ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
(Pic courtsey: Indian Express)